நாகப்பட்டினம்,நவ.14: காரைக்காலில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை முன்பு போல சென்னை எழும்பூர் -வரை நீடிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் முபாரக் தெரிவித்துள்ளார்.இது குறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்ட செயலாளர் விவேக் சர்மாவை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினசரி காரைக்கால் வரை கம்பன் விரைவு இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் கடந்த இரண்டு மாதமாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. இதனால் நாகூர், திருநள்ளார், வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களுக்கு வரக்கூடிய யாத்திரீகர்கள் மட்டுமல்லாமல், திருவாரூர்,காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மீண்டும் எழும்பூரில் இருந்து இரு மார்க்கமாக இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னை எழும்பூர் வரை மீண்டும் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.