கம்பத்தில் மொபட் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

2 days ago 2

பரமத்திவேலூர், ஏப்.2: பரமத்திவேலூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(56). தனியார் ஆயில் ஏஜென்சியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜாதா(44). பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சரவணன் நேற்று முன்தினம் இரவு பழம் வாங்குவதற்காக பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து மொபட் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் இருந்த சிமென்ட் கம்பத்தில் மொபட் மோதியதில் படுகாயமடைந்தார். உடனே, அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சரவணனின் மனைவி சுஜாதா கொடுத்த புகாரின்பேரில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கம்பத்தில் மொபட் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article