கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் ஒத்திவைப்பு

3 months ago 24

கம்பம், அக்.1: கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகரில், வடக்கு காவல் நிலையத்தில் இருந்து அரசு பொது மருத்துவமனை வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும், ஆகிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனை அடுத்து நேற்று, கம்பம் கேகே பட்டி சாலை பிரிவு முதல் அரசு பொது மருத்துவமனை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதனையடுத்து, உத்தமபாளையம் கோட்டாட்சியர் தாட்சாயணி ஆக்கிரமிப்புகளை கண்டறிய, கம்பம் கேகேப்பட்டி சாலை பிரிவு முதல் அரச மரம் வரை ஒவ்வொரு கடைகளாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இதனிடையே அப்பகுதி வியாபாரிகள், தீபாவளி கழித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, கம்பம் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என உத்தமபாளையம் கோட்டாட்சியர் தாட்சாயணி தெரிவித்தார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கம்பம் மெயின் ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article