கமுதியில் மழையால் பாதிப்படைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்

2 months ago 10

கமுதி, நவ.16: கமுதி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மழையால் பாதிப்படைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது. கமுதி அருகே பெருநாழியில் இருந்து சூரங்குடி மற்றும் விளாத்திகுளம் செல்லும் சாலைகள் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மிகவும் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் பயணிக்கும் பொது மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த சாலைகள் தற்போது துரிதமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. கமுதி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பொறியாளர் சக்திவேல் மற்றும் உதவி பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

The post கமுதியில் மழையால் பாதிப்படைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article