கமலா ஹாரிஸுக்கு 'அவெஞ்சர்ஸ்' நடிகர்கள் ஆதரவு

2 months ago 13

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் வேட்பாளா் கமலா ஹாரிசுக்கும், டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், மார்க் ருபாலோ, ஸ்கேர்லெட் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவெஞ்சர்ஸ் பட நடிகர்களான ராபர்ட் டௌனி ஜூனியர் (அயர்ன் மேன்), கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), ஸ்கார்லெட் ஜோஹான்சன் (நட்டஷா), மார்க் ரபல்லோ (ஹல்க்), பால் பெட்டானி (விஷன்), டானாய் குரிரா (ஓகோயே), மற்றும் டான் சீடில் (வார் மெஷின்) ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுமக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

We're back. Let's #AssembleForDemocracy. In the #ElectionEndgame, every vote counts ️ #VoteBlue! Vote @KamalaHarris @Tim_Walz pic.twitter.com/Xp7YdUEqxa

— Mark Ruffalo (@MarkRuffalo) October 31, 2024

இதுதொடர்பாக நடிகை ஸ்கார்லெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். ஜனநாயகத்திற்காக ஒன்று திரண்டுள்ளோம். ஒவ்வொரு வாக்கும் கமலா ஹாரிஸ் மற்றும் டிம் வால்ஸுக்கு ஆதரவாக நீல நிறமாக மாற வேண்டும். அதற்காக வாக்குப்பதிவு நாளான 5ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நமக்கு தான் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்" என தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கமலாவுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டெய்லர் ஸ்விப்ட், லியோனார்டோ டிகாப்ரியோ, டேவ் பாடிஸ்டா, ஜெனிபர் லாரன்ஸ், பியோனஸ், சாரா ஜெசிகா பார்க்கர், ஜெனிபர் அனிஸ்டன் ஆகிய நட்சத்திரங்கள் கமலாவுக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Read Entire Article