கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவு

3 hours ago 2

கன்னியாகுமரி: குமரி கடல் நடுவே வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி உள்ள நிலையில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை வழங்கப்படுகின்றது.

75 ரூபாய் கட்டணம் செலுத்தி படகு சேவையின் மூலம் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடலுக்கு நடுவே சென்று சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். கடலுக்கு நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இடையே கண்ணாடி பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது

38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மேல் எழும்பும் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 11 மீட்டர் அளவிற்கு ஆர்ச் உயரம் கொண்டுள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது குமரி கடல் நடுவே வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் அமைப்பு, அலங்கார கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 2 நாட்களில் கண்ணாடிகள் பாலத்தில் பொருத்தப்பட்டு விடும் என கண்காணிப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

The post கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article