கன்னியாகுமரியில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை... கைதுக்குப் பயந்து மாமியாரும் தற்கொலை

3 months ago 14
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கைதுக்குப் பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரது மாமியாரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக் - சுருதிபாபு தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், மாமியாரின் வரதட்சணைக் கொடுமை தாங்கமுடியவில்லை என வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு சுருதி பாபு கடந்த 20ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் போலீஸ் தன்னைக் கைது செய்துவிடுமோ என அஞ்சிய அவரது மாமியார் செண்பகவல்லி சில தினங்களுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
Read Entire Article