கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நிலையற்ற நீர் மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றனர். விடுமுறை தினமான இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில், படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
The post கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து appeared first on Dinakaran.