கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்பி கடிதம்

9 hours ago 1

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தயாரிக்கும் விவசாயம் மிக முக்கியமானதாக கருத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரப்பர் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் 1956ம் ஆண்டு 4785 ஹெக்டரில் அரசு ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. பின்னர் 1984ம் ஆண்டு அரசு ரப்பர் கழகமாக மாறியது. அரசு ரப்பர் கழகத்தின்கீழ் உள்ள ரப்பர் காடுகள் படிப்படியாக குறைந்து வருவதை தடுத்து ரப்பர் கழகத்தை மீட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article