கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

3 hours ago 2

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும். இதே போல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதையொட்டி கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் தரிசன நேரத்தை நீட்டிக்க மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் ஆலோசனை செய்தது.

அதன்படி பக்தர்கள் அம்மனை சிரமமின்றி தரிசிக்க வசதியாக நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேப்போல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது. 

Read Entire Article