
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மடிச்சல் ஈத்தவிளையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி செல்வி (வயது 65). இவர் சம்பவத்தன்று குழித்துறையில் இருந்து ஒரு அரசு பஸ்சில் மார்த்தாண்டத்திற்கு சென்றார். அவர் தனது கைப்பையில் ஒரு நெக்லஸ், தங்க வளையல், 5 கம்மல், 3 மோதிரம் என மொத்தம் 6 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார்.
அந்த பஸ் மார்த்தாண்டம் சென்றதும் செல்வி கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தேடியும் நகை கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி, செல்வியின் கைபையில் இருந்த நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியிடமிருந்து 6 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.