கன்னட சினிமா இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை

2 months ago 15

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 52). இவர், கன்னட திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டாடா நியூ கெவன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக இயக்குனர் குருபிரசாத் தங்கி இருந்தார். அவர் தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார். 

2-வதாக சுமித்ரா என்பவரை திருமணம் செய்து அடுக்குமாடி குடியிருப்பில் குருபிரசாத் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக குருபிரசாத் வெளியே நடமாடவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்ததில், குருபிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குருபிரசாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், இயக்குனர் குருபிரசாத் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Read Entire Article