கன்சர்வேடிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக்கிற்கு பதில் கருப்பின பெண் தேர்வு

2 weeks ago 6

லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக, கெமி படெனோச் (44) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்கும், கருப்பினத்தை சேர்ந்த முதல் பெண் இவர். கடந்த ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து, கட்சித் தலைவர் பதவியை, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வந்தது.

இதற்கான தேர்தல் நடைமுறைகள் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்தன. இதன் முடிவில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரிய வம்சாவளி பெண் கெமி படெனோச் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளதால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் கெமி செயல்படுவார். இப்பதவியை வகிக்கும் முதல் கருப்பின பெண்ஆவார்.. அவருக்கு முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

The post கன்சர்வேடிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக்கிற்கு பதில் கருப்பின பெண் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article