கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு

2 months ago 12
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும்  கன மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு  1171 கன அடியாக  நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம்  67 அடியாக   உயர்ந்துள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 3ஆவது நாளாக  வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மாஞ்சோலை ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 11 சென்டி  மீட்டரும் நாலுமுக்கு  பகுதியில்  11 சென்டி மீட்டர் மழையும் பதிவானது. 
Read Entire Article