கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்

3 months ago 22
மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாத்தையார் ஓடை நிரம்பி கரை உடைந்து மாட்டுத்தாவனி எதிரே டிஎம் நகர் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது. பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைன் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேலூர் அருகே புதுச்சுக்காம்பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.  ஆரியம்பட்டி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சேங்கலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து சென்றன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பெய்த தொடர் கனமழையால் பாலாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
Read Entire Article