கனமழை: கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை

3 months ago 20

கோவை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில்  கனமழை பெய்து வருகிறது . மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read Entire Article