கனமழை எதிரொலி; போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து.! வெறிச்சோடிய விமான நிலையம்

3 months ago 16

சென்னை: கனமழை, போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக பலர் விமான பயணத்தை ரத்து செய்ததால் சென்னை விமான நிலையத்தில் கூட்டம் குறைவாகவே உள்ளது. விமானங்கள் புறப்பாடு மாற்றியமை வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார்போல பயணிகள் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக விமானப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இன்று கிளம்ப வேண்டிய எட்டு விமானங்களில் போதிய பயணிகள் இல்லாததால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் செல்லும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள சில விமான நிலையங்களில் போதிய பயணிகள் இல்லாததால் விமான நிலையங்களில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கனமழை எதிரொலி; போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து.! வெறிச்சோடிய விமான நிலையம் appeared first on Dinakaran.

Read Entire Article