கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

4 hours ago 3

சென்னை,

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள இந்த சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாளை மறுநாள் (நவம்பர் 23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கனமழையினை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதுமான உபகரணங்கள் தயாராக உள்ளன. மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின்1 5 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. என்று அவர் தெரிவித்துள்ளார் 



Read Entire Article