கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து

8 months ago 32

சென்னை: மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமான், மதுரை, திருச்சி, டெல்லி ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக, இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்றும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் அந்தமான், மதுரை, திருச்சி, டெல்லி ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பயணிகள் பலர் பாதுகாப்பு கருதி, தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் இல்லாமல் கடந்த 3 நாட்களாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

The post கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article