கனடா எங்கள் நாடு.. கனேடியர்களே வெளியேறுங்கள்: பேரணியில் காலிஸ்தான் ஆதரவாளர் முழக்கம்

1 week ago 3

ஒட்டாவா

இந்தியாவின் சில பகுதிகளை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இந்த பிரிவினைவாதிகளுக்கு தடை இல்லாததால் சுதந்திரமாக செயல்படுகின்றனர். குறிப்பாக கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள், இந்துக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இந்துக்களை இந்தியாவுக்கு போகும்படி கூறி வந்த அவர்கள், இப்போது பூர்வீக கனடா மக்களையும் குறிவைத்துள்ளனர். கனடா மக்களை ஐரோப்பாவுக்கும் இங்கிலாந்துக்கும் போகும்படி காலிஸ்தான் ஆதரவாளர் கூறுவது போன்ற வீடியோ வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, காலிஸ்தானி பேரணியின்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தோன்றிய காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது எங்கள் நாடு. நாங்கள்தான் கனடாவின் உரிமையாளர்கள். வெள்ளையர்களே.. நீங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், உங்கள் நாடான ஐரோப்பாவுக்குத் திரும்பி செல்லுங்கள், உங்களின் இங்கிலாந்துக்கு செல்லுங்கள். நீங்கள் கனேடியர்கள் அல்ல, படையெடுப்பாளர்கள், நாங்கள் பூர்வீக இந்தியர்கள்" என கூறுகிறார். அவர் பேசும்போது அங்கிருந்த சிலர் கத்தினர்.

கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதேசமயம் இவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்தியா மீது கனடா பகிரங்கமாக குற்றம்சாட்டியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article