கந்தூரி விழா: திருவாரூர் மாவட்டத்திற்கு 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

2 months ago 13

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இந்த தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். 14 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் உள்ளிட்ட மாற்று மதத்தினரும் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article