கந்தர்வக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

2 months ago 10

 

கந்தர்வகோட்டை,நவ.16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தலின் பேரில் இன்று, நாளை மற்றும் 23, 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

எனவே 18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஆவணங்களாக ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதோ ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்துடன் முகாமில் கலந்து கொண்டு தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொண்டு தேர்தல்களில் வாக்கு செலுத்தி தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கந்தர்வகோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் பால்பாண்டி ஆகியோர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

The post கந்தர்வக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article