கந்தர்வகோட்டை, அக்.11:கந்தர்வகோட்டை பகுதிகளில் நெடுஞ்சாலைதுறை மூலம் அதிக அளவில் மரகன்று நடவு செய்த உதவி கோட்ட பொறியாளருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அருணா பாராட்டு சான்று வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஒன்றிய குழு தலைவர் ரெத்தினவேல் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி உதயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு அரசு நலதிட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் கந்தர்வகோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கோட்டை ராவுத்தர் தலைமையில் ஆன பணியாளர்கள் குறுகிய காலத்தில் திருச்சி சாலையில் 2000 மரக்கன்றுகளும், இதர சாலைகளில் ஆயிரம் கன்றுகளும் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, நெடுஞ்சாலைதுறையினருக்கு பாராட்டு சான்று வழங்கினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.
The post கந்தர்வகோட்டையில் அதிகளவில் மரக்கன்று நெடுஞ்சாலைதுறை உதவிகோட்ட பொறியாளருக்கு பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.