
தோகா,
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் ஜாக் டிராபெருடன் (இங்கிலாந்து) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ், 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் ஜாக் டிராபெரை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.