கத்தார் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டன் இணை சாம்பியன்

2 months ago 7

தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று பிரிட்டன் வீரர்கள் லாயிட் கிளாஸ்பூல், ஜூலியன் கேஷ் இணை அபாரமாக ஆடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

அதில் பிரிட்டன் வீரர்கள் லாயிட் கிளாஸ்பூல், ஜூலியன் கேஷ் இணை, சக நாட்டைச் சேர்ந்த ஜோ சாலிஸ்பரி, நேல் ஸ்குப்ஸ்கி இணையுடன் மோதியது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய கிளாஸ்பூல், கேஷ் இணை, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் வென்றவர்களுக்கு ரூ.1.45 கோடியும், இரண்டாம் பிடித்தவர்களுக்கு ரூ.78 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

The post கத்தார் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டன் இணை சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article