
தோகா,
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலாவது அரையிறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட இகா ஸ்வியாடெக் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 3-6, 1-6 என்ற நேர் செட்டில் ஜெலினா ஆஸ்டாபென்கோவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.