திருப்புவனம், அக்.22: திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய் பொதுப்பணித் துறை நிர்வாகத்தில் உள்ளது. தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பெய்த கனமழையால், கண்மாய் நிரம்பிய நிலையில் தற்போது உபரி தண்ணீர் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து ஆர்ப்பரிக்கிறது. கலுங்குப்பட்டியில் உள்ள கலுங்கு வழியாக வெளியேறும் தண்ணீரில் கட்லாமீன், விரால்மீன் போன்ற நாட்டு மீன்கள் அதிகளவில் துள்ளிக் குதித்து வெளியேறுகின்றன. இதனை அப்பகுதி இளைஞர்கள் பொழுது போக்கிற்காக வரிசையாக தொட்டில் கட்டி பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு மீனும் ஐந்து கிலோ அளவில் உள்ளது. இதனை சாலையில் செல்லும் அனைவரும் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.
The post கண்மாயில் நிரம்பி வழியும் தண்ணீர் தொட்டில் கட்டி மீன் பிடிக்கும் இளைஞர்கள் appeared first on Dinakaran.