'கண்ணப்பா' - நெமலியாக நடிக்கும் பிரீத்தி முகுந்தன்

1 day ago 2

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரீத்தி முகுந்தனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் நெமலியாக நடிக்கிறார்.

✨ Behold the mesmerizing look of Preity Mukhundhan as Princess in #Kannappa ✨ Sharing the screen with @iVishnuManchu, she adds grace and charm to this divine tale. Experience the magic and splendor of divinity! #HarHarMahadevॐ@themohanbabu @Mohanlalpic.twitter.com/UVgiPVwL4K

— Kannappa The Movie (@kannappamovie) December 30, 2024
Read Entire Article