கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்: வாகன ஓட்டிகளிடம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு

1 week ago 2

பெரம்பலூர், நவ. 8: குடும்ப நன்மைக்காக கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என பெற்றோரிடம் வலியுறுத்துங்கள் என்று பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஏறி கடலைமிட்டாய் கொடுத்து பெரம்பலூர் டி எஸ்பி ஆரோக்கியராஜ் நூதனமாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் போதைக்கு எதிராகவும், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் வைக்கப்பட் டுள்ள \”போதையில்லா பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்குவோம்\” என்ற விழிப்புணர்வுப் பதாகை களில் போலீசார் பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் நின்று போட்டோ எடுத்து, வித்தி யாசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா இந்த விழிப்புணர்வு பதாகையில் நின்று போட்டோ எடுத்து – போதை ‘எனக்குவேண்டாம்’ நமக்கும்வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.தொடர்ந்து நேற்று (7ம் தேதி) பெரம்பலூர் நகரில் புது பஸ்டாண்டு, ரோவர் வளைவு, காமராஜர் வளைவு, பழைய பஸ் டாண்டு ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மகேஷ், போக்கு வரத்து சப்.இன்ஸ்பெக்டர் தனவேல் ஆகியோர் முன்னிலையில், பெரம்ப லூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டுபொதுமக்களிடம், பயணிகளிடம், வாகன ஓட்டிகளிடம் ஒலிபெருக்கி மூலம் பேசியதாவது : தமிழக அரசின் உத்தரவுப் படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாராத சூழ்நிலைகளில் விபத்துக்கள் நேரிடும் போது, நம்மையே நாம் காப்பாற்றிக் கொள்ள ஹெல்மெட் அணிய வேண்டியது அவசிய மாகும்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் போதும், செல்போன்களில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டும் போதும், அதிவேகமாக, சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் போதும் விபத்துக்கள் நடக்கிறது. இதில் காயங்களோடு உயிர் தப்பினாலும், நம்மை நம்பிய குடும்பத்தாரை நம்மால் காப்பாற்றிவிட முடியும். ஆனால் உயிரிழந்தால் நம்மால் நமது குடும்பமே நடுத் தெருவிற்கு வந்துவிடும் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நீங்களாக திருந்தினால் மட்டுமே வாகன விபத்துக் களையும் உயிரிழப்புக ளையும் தடுக்க முடியும். இதற்காக காவல்துறை சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்எனத் தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஎஸ்பி ஆரோக்கியராஜ், பள்ளி, கல்லூரி வாகனங்களில் திடீரென ஏறி மாணவ,மாணவிகளை கவரும் விதமாக அவர்களுக்கு கடலை மிட்டாய்களை வழங்கிப் பேசும்போது, நீங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்பாக, இருசக்கர வாகனங்களில் அலுவல கத்திற்கோ, வேலைக்கோ, பொருட்களை வாங்கவோ வெளியே செல்லும் உங்கள் பெற்றோரிடம், நம்முடைய குடும்ப நன்மைக்காக கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என வலியுறுத்துங்கள். பிள்ளைகள் சொன்னால் பெற்றோர் நிச்சயம் கேட்பார்கள் என நூதன மாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

The post கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்: வாகன ஓட்டிகளிடம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article