ஈரோடு, ஜன.14: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்தப்படவுள்ள 480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதே அளவிலான கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவிபேட் ஆகியவற்றை சரி பார்க்கும் பணி கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதன் கிடங்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த நிலையில், அவற்றை கணினி சுழற்சி முறையில் வாக்குச் சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி முதற்கட்டமாக நேற்று நடைபெற்றது. இதில் 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், 20 சதவீத கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 30 சதவீதம் விவிபேட் யூனிட்கள் என மொத்தம் 284 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் 38 விவிபேட் யூனிட்டுகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தேர்தல் தனி தாசில்தார் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கணினி சுழற்சி முறையில் வாக்குப்பதிவு; இயந்திரங்கள் முதற்கட்டமாக ஒதுக்கீடு appeared first on Dinakaran.