கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலன் இன்றி பலி

2 months ago 13
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அய்யம்பேட்டையை சித்ரா தனது கணவர் பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாகவும், கடந்த 13ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த பாலாஜி, சித்ரா மீது பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும் கூறப்படுகிறது. தன்னை கொளுத்திய கணவரை சித்ரா கட்டி அணைத்ததால் தீப்பற்றி எரிந்த இருவரும் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்ரா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாகவும், பாலாஜி 40 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவேரிப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article