திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்பியதாகவும், இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ஆட்சியருக்கு, அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், தமிழ்ச்செல்வன், ரமேஷ் உள்ளிட்டோர், மதுரை ஆட்சியருக்கு அனுப்பியுள்ல நோட்டீஸில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு தரப்பினரிடையே அமைதி ஏற்படுத்துவதையே அதிமுக விரும்புகிறது. கட்சி மீது அவதூறு செய்யும் நோக்கத்துடன், கடந்த 5-ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்.