கட்சி தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர் - திருமாவளவன்

7 months ago 23

திண்டுக்கல்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆயக்குடியில், நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு "எனக்கும் முதல்-அமைச்சர் கனவு உண்டு" என்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தேன். அதாவது எளிய மக்களும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான். இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால்தான் கோலம் போட முடியும். ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது. அதுபோல் அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றிவிட முடியாது.

கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் அங்குலம், அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத, அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் வலிமை பெற்றுள்ளோம். மராட்டியம், கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துள்ளது. எனவே மக்கள் நம்பிக்கையை தக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article