ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. போட்டி நடக்கும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்த ஆண்டில் இந்திய அணி ஆடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது என்பதால் வெற்றியோடு முடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப்சிங், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ அல்லது இன்கபா பீட்டர், அன்டில் சிம்லேன், கேஷவ் மகராஜ், லுதோ சிபம்லா.