'கடைசி உலகப் போர்' படத்திலிருந்து 'அதிர்கிறதோ' பாடல் வெளியீடு!

3 months ago 31

சென்னை,

நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'பிடி சார்'. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த .படத்தில் நடராஜ் என்ற நட்டி கிங் மேக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் 'அதிர்கிறதோ' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

The pulsating #Adhirgiradha Video Song from #KadaisiUlagaPor is out now https://t.co/0nstbSpjC5@hiphoptamizha pic.twitter.com/UfKZm5ffOW

— Only Kollywood (@OnlyKollywood) October 4, 2024

இந்த படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article