தர்மபுரி, டிச.13: தர்மபுரியில், நேற்று காலை மழைக்கு முன்னதாக நெடுஞ்சாலைகளில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக, நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்தது. கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று காலை சாரல் மழையுடன் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி -ஓசூர் விரைவுச்சாலை பகுதிகளில் சாரல் மழையுடன் பனிமூட்டம் அதிகரித்தது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மறைத்ததால், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
The post கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.