கடும் கோடை வெயிலால் விற்பனை பாதிப்பு உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் தேக்கம்: வியாபாரிகள் கவலை

9 hours ago 2

ஈரோடு: சுட்டெரிக்கும் கடும் கோடை வெயிலால் பெட்ஷீட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோட்டில் மாநகரில் திருவேங்கடசாமி, ஈஸ்வரன் கோயில், என்எம்எஸ் காம்பவுண்ட், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பெட்ஷீட் குடோன்களும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட பெட்ஷீட் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த குடோன்களில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், பழையகோட்டை, சேலம் மாவட்டம் எடப்பாடி, கரூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறியால் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் ஈரோட்டில் உள்ள குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த பெட்ஷீட் குடோன்களில் பெட்ஷீட் வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், வட மாநிலங்களான மேற்கு வங்கம், ராஜஸ்தான், போபால், டெல்லி, சூரத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக பெட்ஷீட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

வடமாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பனிக்காலம் துவங்கியதால் ஈரோடு பெட்ஷீட் குடோன்களில் வடமாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் 70 சதவீதம் பேர் வாங்கி சென்று வந்தனர். ஆனால், தற்போது வடமாநிலங்களிலும் பேன்சி, பிரிண்டட் பெட்ஷீட்கள் அதிகளவில் உற்பத்தி துவங்கி விட்டதால் வடமாநில வியாபாரிகள் பெரும்பாலானோர் ஈரோட்டிற்கு வருகை தரவில்லை. பெட்ஷீட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

இதில் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பெட்ஷீட் விற்பனை முற்றிலும் முடங்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், பெட்ஷீட் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பெட்ஷீட் குடோன் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் நெசவாளர்கள் ஆண்டுக்கு 7 மாதங்கள் தொடர்ந்து பெட்ஷீட் உற்பத்தி செய்து, மீதமுள்ள 5 மாதங்களில் விற்பனை செய்வது வழக்கம். பனிக்காலத்தின் போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெட்ஷீட் குடோன்களில் 70 சதவீதம் விற்பனையானது. அதனைத்தொடர்ந்து விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பெட்ஷீட்களை உற்பத்தி செய்து, குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

தமிழக பெட்ஷீட்டுகளுக்கு போட்டியாக வட மாநிலங்களில் விலை மலிவான குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பயன்படுத்தப்படும் சால்வை, வெல்வட் ரக பெட்ஷீட்கள் வரவினால், நீண்ட காலம் உழைக்கும் நமது பெட்ஷீட்டுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக பெட்ஷீட் தரம் அறிந்த வட மாநிலத்தவர்கள் சில வியாபாரிகள் தொடர்ந்து ஈரோடு வருகை தந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

மேலும், மூகூர்த்த நாட்களல் சில்லரை விற்பனையும் நடந்து வருகின்றன. எங்களிடம் சென்னிமலை பெட்ஷீட்கள் (ஒன்று) ரூ.60 முதல் ரூ.750 வரையிலும், வெள்ளகோவில் பெட்ஷீட்டுகள் ரூ.80 முதல் ரூ.200 ரூபாய் வரையிலும், கரூர் மாவட்ட பெட்ஷீட்டுகள் ரூ.70 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்கிறோம். கடந்த 2 ஆண்டுகளை விட பெட்ஷீட் விலை குறைந்துள்ளது.

ஆனால், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கோடை காலம் துவங்கி விட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் பெரும் பகுதி தேக்கம் அடைந்துள்ளன. மழைக்காலம் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஓரளவுக்கு சில்லரை விற்பனையும், மொத்த விற்பனையும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். வெயில் சீசன் முடியும் வரை எங்களது வியாபாரம் இதேபோல் முடங்கி தான் காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

* வடமாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பனிக்காலம் துவங்கியதால் ஈரோடு பெட்ஷீட் குடோன்களில் வடமாநில மொத்த வியாபாரிகள் 70 சதவீதம் பேர் வாங்கி சென்று வந்தனர். ஆனால், தற்போது வடமாநிலங்களிலும் பேன்சி, பிரிண்டட் பெட்ஷீட்கள் அதிகளவில் உற்பத்தி துவங்கி விட்டதால் வடமாநில வியாபாரிகள் பெரும்பாலானோர் ஈரோட்டிற்கு வருகை தரவில்லை. பெட்ஷீட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

* தமிழக பெட்ஷீட்டுகளுக்கு போட்டியாக வட மாநிலங்களில் விலை மலிவான குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பயன்படுத்தப்படும் சால்வை, வெல்வட் ரக பெட்ஷீட்கள் வரவினால், நீண்ட காலம் உழைக்கும் நமது பெட்ஷீட்டுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக பெட்ஷீட் தரம் அறிந்த வட மாநிலத்தவர்கள் சில வியாபாரிகள் தொடர்ந்து ஈரோடு வருகை தந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

* சென்னிமலை பெட்ஷீட்கள் (ஒன்று) ரூ.60 முதல் ரூ.750 வரையிலும், வெள்ளகோவில் பெட்ஷீட்டுகள் ரூ.80 முதல் ரூ.200 ரூபாய் வரையிலும், கரூர் மாவட்ட பெட்ஷீட்டுகள் ரூ.70 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்கிறோம். கடந்த 2 ஆண்டுகளை விட பெட்ஷீட் விலை குறைந்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கோடை காலம் துவங்கி விட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் பெரும் பகுதி தேக்கம் அடைந்துள்ளன.

The post கடும் கோடை வெயிலால் விற்பனை பாதிப்பு உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் தேக்கம்: வியாபாரிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article