கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு பாதுகாப்பான பகுதியாக கடற்கரையை மாற்ற வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

3 hours ago 1

சென்னை: அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையின் வடக்கு எல்லையான பழவேற்காட்டில் தொடங்கி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம் வரையிலான வங்கக் கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்த வந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்திருக்கின்றன என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏற்ற இடமாக வங்கக் கடற்கரைகள் கருதப்படுகின்றன.

இத்தகைய ஆமைகள், சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கொல்லப்படுவதற்கு அந்தப் பகுதிகளில் இழுவைப் படகுகளை பயன்படுத்தியும், நீண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்படுவதும் தான் காரணம் ஆகும். எனவே ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

The post கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு பாதுகாப்பான பகுதியாக கடற்கரையை மாற்ற வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article