கடலூர் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

1 week ago 2

கடலூர்,

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 29-ந்தேதி முதல் கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று கோவில் கோபுர விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'கோவிந்தா.. கோவிந்தா..' என முழக்கமிட்டு வழிபட்டனர். இந்த விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்ற பின்னர் சாமி தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Read Entire Article