கடலில் சீற்றத்துடன் மேல் எழும்பிய அலைகளால் கரையில் அரிப்பு

4 months ago 17
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடல் அலைகள் சீற்றத்துடன் மேலெழும்பி, கரைகளில் அரிப்பு ஏற்பட்டதால் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர். புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு மற்றும் சூறாவளி காற்றில் படகுகள் சேதமடையாமல் இருக்க டிராக்டர் உதவியுடன் கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள சாலை ஓரத்தில் பைபர் மற்றும் நாட்டுப் படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராம மீனவர்களும், தங்கள் படகுகளை டிராக்டர் உதவியுடன் மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Read Entire Article