கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை

6 hours ago 3

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மத சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை பிப்ரவரி 5, 2020 முதல் பிப்ரவரி 5, 2025 வரை செலுத்தப்பட்டதாக அவர் கூறினார். இதில் ரூ.270 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.130 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அயோத்தி ஒரு முக்கிய மத சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டில், அயோத்திக்கு 16 கோடி வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article