கஞ்சா வியாபாரி கைது

6 hours ago 2

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் கடந்த வாரம் காசிமேடு பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது காசிபுரம் பி பிளாக் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற காசிமேட்டை சேர்ந்த ரவி (54), சந்தோஷ் (18), கவுதம் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி (எ) அந்தமான் ரவி (61) என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 4 செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 2018ம் ஆண்டு, புழல் சிறையில் இருந்தபோது ரவி (எ) பவுடர் ரவிக்கும், ரவி (எ) அந்தமான் ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தில் ஆந்திராவில் இருந்து அந்தமான் ரவி கஞ்சா கடத்தி வந்து பவுடர் ரவிக்கு கொடுத்துள்ளார். அதனை காசிமேடு பகுதியில் பவுடர் ரவி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

* சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த மோசஸ் (19), விக்னேஷ் (19) ஆகியோரை, திருமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மடக்கி பிடித்தனர். விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வியாபாரி கைது appeared first on Dinakaran.

Read Entire Article