கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது

3 months ago 24
கோவையில் கஞ்சா போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய மாணவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  குனியமுத்தூரில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அவர்களை 92 - வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான ராஜா திட்டி விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மாணவரான கோபிநாத், இரண்டாமாண்டு படித்து வரும் மாணவருடன் சேர்ந்து ராஜாவை வெட்டியதால் காவல்துறையினர் கைது செய்தனர்.
Read Entire Article