மதுரை, டிச. 8: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் அவர் கன்னிவாடி பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (42) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததுடன், 12 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கஞ்சா கடத்தியது உறுதியானதால் மாயகிருஷ்ணனுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
The post கஞ்சா கடத்தியவருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.