கங்குவா திரைப்படம் : 'செவன் சாமுராய்' மாதிரியான படம் இது...ஒளிப்பதிவாளர் வெற்றி

2 months ago 14

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அதில் ஒளிப்பதிவாளர் வெற்றி கங்குவா படத்தை செவன் சாமுராய் படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில், 'நான் திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 'கிளாடியேட்டார் , ப்ரேவ் ஹார்ட் , செவன் சாமுராய்' மாதிரியான படங்களைப் பார்த்து இந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அப்படியான ஒரு ஆசையை நிறைவேற்றும் வகையில் 'கங்குவா' படம் அமைந்துள்ளது. நிச்சயமாக இந்த படம் அவருக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தரும் என்று கூறியுள்ளார்.

ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா இயக்கத்தில் 1954-ம் ஆண்டு வெளியான படம் 'செவன் சாமுராய்'. இப்படத்துடன் ஒப்பிட்டு ஒளிப்பதிவாளர் வெற்றி பேசியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

Read Entire Article