ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

1 day ago 3

நெல்லை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

இதுதவிர நிலவு ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவற்றை தொடர்ந்து இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ககன்யான் செயற்கைகோளை கொண்டு செல்லும் விகாஸ் என்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read Entire Article