"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

1 week ago 6

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 'நட்சத்திரா' எனத்தொடங்கும் பாடலை அபிஷேக் சுரேஷ், பிரியாமாலி பாடியுள்ளனர்.

The sound of the sea, squad and sparks of love ️#Natchathira from #OhoEnthanBaby is dropping on 17th June at 5PM.A @jenmartinmusic number. @thisispriyamali @sathyamusician #AbishekSuresh#FirstSingle#OEB#OEBfromJuly11Directed by @Krishnakum25249. Produced by -… pic.twitter.com/9qAfePbDvD

— Vishnu Vishal Studioz (@VVStudioz) June 15, 2025
Read Entire Article