ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

4 hours ago 3

 

கூடலூர், மே 23: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் நீலகிரி மாவட்ட பொது குழு கூட்டம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க கூடலூர் வட்டக்கிளை அலவலக வளாகத்தில் நடைபெற்றது. நிர்வாகி சிரியேக் தலைமை வகித்தார். சிவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். அச்சுதன் வரவேற்றார். 80 வயது கடந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சாமுலேசன், ஜமால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் முரளிதரன், மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களையும் சங்கத்தில இணைத்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

The post ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article