ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூத்த வக்கீலாக நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

3 hours ago 1

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நேற்று முன்தினம் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. அதில், “உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் நான்கு பேருக்கு மூத்த வழக்கறிஞர் பதவி வழங்கி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்ற கொலீஜியம் நியமனம் செய்துள்ளது. இதேபோல் அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரவிந்த் சிங் சங்வான், ஆந்திரா மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.நாகார்ஜுன ரெட்டி, சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கவுதம் பாதுரி உள்ளிட்டோரையும் மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரது பணியும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கொலீஜியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூத்த வக்கீலாக நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article