ஓமலூரில் கபடி போட்டி

1 month ago 9

ஓமலூர், மார்ச் 25: ஓமலூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 26 மகளிர் அணிகளும், 34 ஆடவர் அணிகளும் கலந்து கொண்டு விளையாடியது. மகளிருக்கான போட்டியில் சேலம் ஏவிஎஸ் அணி முதலிடம் பிடித்து ₹50ஆயிரம் பரிசு தொகை மற்றும் கோப்பையை வென்றது. அதேபோல், ஆடவர் இறுதி போட்டியில், கோவை கற்பகம் அணி முதலிடம் பிடித்து, ₹1லட்சம் பரிசு தொகை மற்றும் கோப்பையை வென்றது.

The post ஓமலூரில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article